News February 23, 2026

தூத்துக்குடி: பைக் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.!

image

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள சின்ன மாடன் குடியிருப்பை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (57) கூலி தொழிலாளி. இவர் தனது மகனுடன் பைக்கில் பேய் குளத்திற்கு வந்துவிட்டு திரும்பியபோது, பழனியப்பபுரம் அருகே வந்தபோது பைக்கிலிருந்து நிலைதடுமாறி விழுந்ததில் முத்துகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சாத்தான்குளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News February 27, 2026

தூத்துக்குடி: 1ம் வகுப்பு மாணவி மீது தாக்குதல்

image

தூத்துக்குடி ஜார்ஜ் சாலை பகுதியைச் சேர்ந்த ஜாய்ஸ் (45), தெற்கு புதுத்தெருவிலுள்ள நடுநிலைப் பள்ளி ஆசிரியர். கடந்த 19ம் தேதி, பாடம் சரியாகப் படிக்கவில்லை என கூறி முதலாம் வகுப்பு மாணவியை பிரம்பால் தாக்கியதாக புகார் எழுந்தது. மாணவியின் கையில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 26, 2026

தூத்துக்குடி: நடு வழியில் பெட்ரோல் தீர்ந்து விட்டால்.. NO TENSION

image

தூத்துக்குடி மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் <>’Fuel@Call’<<>> என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 26, 2026

JUST IN தூத்துக்குடி மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிப்பு

image

அய்யா வைகுண்டரின் 194-வது பிறந்த விழா மார்ச்.4 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்கு பதிலாக மார்ச்.14 அன்று அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார். SHARE IT

error: Content is protected !!