News December 30, 2025

தூத்துக்குடி: பைக் சக்கரத்தில் சேலை சிக்கி பெண் பலி

image

கால்வாய் திருவரங்கபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெபசெல்வி (53). இவர் நேற்று இரவு பைக்கில் தனது மகன் டேவிட் அந்தோணியுடன் (24) சர்க்கரை அளவு பரிசோதனை செய்வதற்காக பேய்குளம் சென்றனர். பழனியப்பபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது ஜெப செல்வியின் சேலை பைக் சக்கரத்தில் சிக்கி தவறி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News January 2, 2026

தூத்துக்குடி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

image

தூத்துக்குடி மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள், அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன் மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க

News January 2, 2026

தூத்துக்குடி: மின்சாரம் தாக்கி இளைஞர் பரிதாப பலி

image

எப்போதும் வென்றான் அருகே உள்ள கீழச்செய்த்தலை கிராமம் கீழத்தெருவைச் சேர்ந்வர் மகாராஜா (24). இவர் இன்று அதிகாலை தனது வீட்டில் மோட்டார் சுவிட்சை போடும்போது, மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு  அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து எப்போதும் வென்றான் காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 2, 2026

தூத்துக்குடி: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு?

image

தூத்துக்குடி மக்களே, நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என GoogleMap வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <>Tamil Nilam<<>> என்ற செயலியில் Location-ஐ ON செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற இடத்தை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE பண்ணுங்க

error: Content is protected !!