News December 31, 2025

தூத்துக்குடி: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் இதை செய்யுங்க

image

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 04449076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். SHARE பண்ணுங்க

Similar News

News January 5, 2026

திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் எச்சரிக்கை செய்தி

image

திருச்செந்தூர் முருகன் கோவிலில் கோவில் வளாகத்திற்குள் வந்தால் மட்டுமே பன்னீர் இலை, விபூதி பிரசாதம் உள்ளிட்ட பல்வேறு பிரசாத பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இப்படியான சூழலில் முருகன் கோயில் பெயரில் போலி சமூக தளத்தில் சிலர் கோவில் பிரசாதத்தை தங்களுக்கு கொரியரில் அனுப்பி வைப்பதாக கூறி பொய் தகவல்களை பரப்பி வருகின்றனர். எனவே, இவற்றை யாரும் நம்ப வேண்டாம் என கோவில் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

News January 4, 2026

தூத்துக்குடி: இனி பட்டா பெயர் மாற்றம் ஈஸி

image

தூத்துக்குடி மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்

News January 4, 2026

தூத்துக்குடி: தாமிரபரணி ஆற்றை ஆய்வு செய்யும் அதிகாரி

image

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்த கோரி சமூக ஆர்வலர் ஒருவர் மதுரை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்து நீதிமன்றம் உத்தரவை சரிவர செய்யாததாக கூறி மேல் முறையீடு வழக்கு மீண்டும் தொடுக்கப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி ஆகியோர் இது தொடர்பாக ஆய்வு நடத்த ராஜஸ்தானை சேர்ந்த நிபுணர் ராஜேந்திரசிங் என்பவர் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

error: Content is protected !!