News January 2, 2026
தூத்துக்குடி: பெற்றோர் திட்டியதால் தூக்கிட்டு தற்கொலை

உடன்குடி பகுதியை சேர்ந்தவர் இசக்கிமுத்து (57). இவரது கடைசி மகன் சுந்தர் (25). கட்டிடத்தொழிலாளியான சுந்தருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவில் சுந்தர் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தபோது அவரை தாய் சாவித்திரி கண்டித்துள்ளார். இதனால் மனவேதனையில் சுந்தர் தனது அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குலசை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 6, 2026
தூத்துக்குடிக்கு இலவச புகார் எண் அறிவிப்பு

தூத்துக்குடி மாநகர பகுதிகளில் பல்வேறு நேரங்களில் பாதாள சாக்கடை குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறும் சூழல் ஏற்படுகிறது. இதனை உடனே சீர் செய்ய தூத்துக்குடி மாநகராட்சி இலவச தொலைபேசி எண்ணை (18002030401) அறிவித்துள்ளது. இதில் பொதுமக்கள் தங்கள் பகுதியில் மற்ற பல்வேறு அடிப்படை புகாரினையும் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க.
News January 6, 2026
தூத்துக்குடி: மாணவி கழுத்தை நெரித்து படுகொலை

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி உமா(19) தென்காசி தனியார் காவலர் பயிற்சி பள்ளியில் படித்து வந்தார். இவர் நேற்று அதே கல்லூரியில் பயிலும் ராஜேஷ் (25) என்பவருடன் பைக்கில் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு ராஜேஷ், உமாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின், வெம்பக்கோட்டை போலீசில் நேற்று சரண் அடைந்த ராஜேஷை கழுகுமலை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
News January 6, 2026
தூத்துக்குடியை சேர்ந்த நபர் அடித்துக் கொலை

தூத்துக்குடி மாவட்டம் முதலூர் பகுதியை சேர்ந்தவர் மார்ட்டின். இவர் நெல்லை சீவலப்பேரியை அடுத்த தோனி துறை பகுதியில் இன்று அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். அங்குள்ள சுடுகாட்டுப் பகுதியில் மது அருந்தி கொண்டிருந்த போது ஏற்பட்ட தகராறில் மர்ம நபர்கள் அவரை அடித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளதாக கூறப்படுகிறது. சீவலப்பேரி போலீசார் உடலை கைப்பற்றி இச்சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


