News March 29, 2025
தூத்துக்குடி: பில்லி சூனியம் விலக செய்யும் மந்திர மை

தூத்துக்குடி, ஏரல் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் உள்ளது சேர்மன் அருணாசல சுவாமி கோவில். இங்கு பேய் பில்லி சூனியம் பிடித்தவர்களுக்கு மந்திர மை ஒன்று வழங்கப்படுகிறது. ஆல், அரசு, வேம்பு, துளசி, வில்வம், சந்தனம், கற்பூரம் ஆகியவற்றை யாகத்தில் நெய் ஊற்றி பஸ்மாக்கி அதனை சுவாமி முன்வைத்து வழிபாடு செய்து வழங்குகிறார்கள். இந்த மையை இட்டால் பேய் பில்லி சூனியம் விலகும் என்பது நம்பிக்கை. *தேவைபடுவோருக்கு பகிரவும்*
Similar News
News April 2, 2025
தூத்துக்குடி: இன்று இரவு ரோந்து போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு-நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
News April 1, 2025
தூத்துக்குடி மீனவர் குறை தீர்ப்பு கூட்டம் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மாதம் தோறும் மீனவர் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த மாதத்திற்கான மீனவர் குறை தீர்ப்பு நாள் கூட்டம் வரும் 4-ஆம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து காலை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் இன்று தெரிவித்துள்ளார். மீனவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு குறிகளை தெரிவிக்க கேட்டுக்கொண்டுள்ளார்.
News April 1, 2025
கனவு வழிகாட்டுதல் நிகழ்ச்சி – கலெக்டர் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்த 12-ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள மாணவர்களுக்கு “என் கல்லூரி கனவு” என்ற உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 5-ஆம் தேதி தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பள்ளியில் வைத்து நடைபெற இருக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.