News August 14, 2024

தூத்துக்குடி பள்ளிகளுக்கு ஆட்சியர் புதிய அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் திட்டமில்லா பகுதிகளில் கடந்த 2011க்கும் முன் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கல்வி நிறுவனங்கள், வரன்முறை அனுமதி இசைவு பெற 31-1-2025 க்குள் www.tcp.org.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து வரன்முறை அனுமதி இசைவு சான்று பெற தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar News

News January 7, 2026

தூத்துக்குடியில் வீடு புகுந்து நகை திருட்டு

image

தூத்துக்குடி கந்தசாமி புரத்தைச் சேர்ந்த சரவணகுமார் மனைவி முத்துலட்சுமி அங்குள்ள மருந்தகத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை 4 மணிக்கு முத்துலட்சுமி வீட்டில் சாவி வைத்துவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். பின் இரவு 7 மணிக்கு வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது பீரோவில் இருந்த 4.5 பவுன் நகை மற்றும் ரூ.4500 பணம் திருடுபோயிருந்தது. இதுகுறித்து தூத்துக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 7, 2026

தூத்துக்குடி: இலவச கேஸ் சிலிண்டர் வேண்டுமா? உடனே APPLY

image

தூத்துக்குடி மக்களே; உஜ்வாலா யோஜனா என்ற திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த படிவத்தை இந்தியன், எச்.பி. பாரத் ஆகிய ஏதேனும் ஒரு கேஸ் ஏஜென்சியில் கொடுத்தால் இலவச கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் வழங்கப்படும். இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க

News January 7, 2026

தூத்துக்குடி கலெக்டரின் முக்கிய அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் கிராமப்புற பகுதிகளுக்கு உயர்தர இணைய சேவை வழங்கும் திட்டம் தொடங்க உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் இளம் பகவத் தெரிவித்துள்ளார். எனவே, இதில் பயனடையும் தொழில் பங்கிட்டாளர்கள் https://tanfinet.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!