News March 7, 2025

தூத்துக்குடி: பறவைகள் கணக்கெடுப்பு நாளை தொடக்கம்

image

தூத்துக்குடி வனக்கோட்டம் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்புக்கு 20 இடங்களும், நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்புக்கு 25 இடங்களும் தோ்வு செய்யப்பட்டுள்ளன. இப்பணி காலை 6 முதல் 9 மணி வரை நடைபெறும். பங்கேற்க விருப்பமுள்ளோர் வனச்சரக அலுவலரை 95974 77906 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு பெயர்ப்பதிவு செய்யலாம். பங்கேற்போருக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். SHARE IT.

Similar News

News April 21, 2025

பூட்டை உடைத்து 14 பவுன் நகை திருட்டு

image

தூத்துக்குடி வி. இ ரோட்டை சேர்ந்தவர் ஜாக்சன் (61). நேற்று முன்தினம் இவர் ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி தேவாலயம் சென்று விட்டு நள்ளிரவில் வீடு திரும்பியுள்ளார். அப்போது இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த 14 பவுன் நகை திருடப்பட்டதைக்  கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 21, 2025

தூத்துக்குடி: இன்று இரவு ரோந்து போலீஸ் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் இப்போது வெளியிட்டுள்ளது.

News April 20, 2025

அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை

image

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் 94 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். இதற்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி. இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்து உதவவும்.

error: Content is protected !!