News December 29, 2025

தூத்துக்குடி: பணம் விவகாரத்தில் தாய், மகன் கடத்தல்!

image

ஸ்ரீவை பகுதியை சேர்ந்த ராஜபாண்டி, தேனியை சேர்ந்த மல்லிகாவிடம் (58) ரூ.5 லட்சம் கடன் கொடுத்துள்ளார். மல்லிகா கடந்த 2 மாதமாக வட்டி கட்டாமல் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் ராஜபாண்டி 5 பேருடன் மல்லிகா வீட்டில் அத்துமீறி நுழைந்து, மல்லிகா, அவரது மகன் துர்கேஷை தாக்கி 15 பவுன் நகை, ரூ.50,000 எடுத்துள்ளனர். பின் காரில் கடத்தி திருமங்கலம் பகுதியில் இறக்கி விட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

Similar News

News December 30, 2025

தூத்துக்குடி: பைக் சக்கரத்தில் சேலை சிக்கி பெண் பலி

image

கால்வாய் திருவரங்கபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெபசெல்வி (53). இவர் நேற்று இரவு பைக்கில் தனது மகன் டேவிட் அந்தோணியுடன் (24) சர்க்கரை அளவு பரிசோதனை செய்வதற்காக பேய்குளம் சென்றனர். பழனியப்பபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது ஜெப செல்வியின் சேலை பைக் சக்கரத்தில் சிக்கி தவறி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 30, 2025

தூத்துக்குடி: ஊருக்கு திரும்பிய போது விபரீதம்., 2 இளைஞர்கள் பலி

image

பெரியதாழை பகுதியை சேர்ந்த யோசுவா (21), சாலமோன் (20) இருவரும் நேற்று இரவு 2 பேரும் டூவீலரில் நெல்லை மாவட்டம் உவரிக்கு சென்றுள்ளனர். அங்கிருந்து ஊருக்கு திரும்பியபோது கூட்டப்பனை அருகே முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றனர். எதிரே வந்த வேன் பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இருவரும் படுகாயத்துடன் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு உயிரிழந்தனர். இதுகுறித்து உவரி போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 30, 2025

தூத்துக்குடி: வீடு/ நிலம் விவரம் தெரிஞ்சுக்கனுமா?

image

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நில உரிமை, சிட்டா, நகர நில அளவை விவர பதிவேடுகள், பட்டா விவரங்களை மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களை சரி பார்க்க எங்கிருந்தும் எந்நேரத்திலும் இணையவழி சேவைகள் உள்ளன. இங்கு <>க்ளிக்<<>> செய்து பார்வையிடலாம். இததகவல்களை பெற எந்தவொரு வருவாய்த் துறை அலுவலத்திற்கும் நேரில் செல்ல வேண்டிய அவசியமில்லை. மேலும் நிலம் சம்பந்தமான புகார்களுக்கு தொடர்பு கொள்ளலாம். 0462-2501032. SHARE IT..

error: Content is protected !!