News September 27, 2025
தூத்துக்குடி: நேற்று மனைவி மரணம்., இன்று கணவர் தற்கொலை

தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை சேர்ந்தவர் காளிராஜன். டீ மாஸ்டர். நேற்று இவரது மனைவி உடல் நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டார். இதனால் மனவேதனை அடைந்த காளிராஜன் இன்று தூத்துக்குடி ரங்கநாதபுரத்தில் உள்ள தனது சொந்த வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது சம்பந்தமாக மத்திய பாகம் போலீசார் விசாரணை நடத்தினர்.
Similar News
News February 11, 2026
தூத்துக்குடி மாவட்டத்தில் புதுவிதமான கொள்ளை!

திருச்செந்தூர் – ஆறுமுகனேரிக்கு வாடகை கார் ஒன்றை(பிப்.7) 4 பேர் அழைத்துள்ளனர். பின்னர் ஓட்டுநர் வேல்குமார்(55) என்பவரை, சீனந்தோப்பு அருகே காரை நிறுத்த கூறி, கைப்பேசி, ரூ.5000, 4 கி தங்க மோதிரத்தை பறித்துவிட்டு தப்பினர். போலீசார் சிசிடிவி மூலம் விசாரித்து, உவரியில் கலையரசன்(23), முத்துக்குமார்(19) ஆகியோரை கைது செய்து சிறை அடைத்தனர். பணம், மோதிரம் மீட்கப்பட்டது. தலைமறைவான இருவரை தேடி வருகின்றனர்.
News February 11, 2026
தூத்துக்குடி காவல் ரோந்து பணியில் சிக்கிய கஞ்சா

கோவில்பட்டி மது விலக்கு காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மதுவிலக்கு காவல் நிலைய ஆய்வாளர் மீஹா தலைமையில் போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது பாரதிநகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அப்பகுதியை சேர்ந்த பாலா மற்றும் காளீஸ்வரன் 1 1/2 கிலோ கஞ்சா வைத்து இருப்பது தெரிந்தது. இந்நிலையில் கைது செய்தனர்.
News February 11, 2026
தூத்துக்குடி: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு…

தூத்துக்குடியில் உள்ள நியாய விலை கடைகளில் பொருட்கள் வாங்கும் குடும்ப அட்டைதாரர்களிள் கைரேகை (Biometric) மற்றும் கருவிழி (IRIS) பதிவு சரியாக விழாதவர்களுக்கு சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. முகாம் நடைபெறும் நாள்: 11.02.2026 (புதன்கிழமை); நேரம்: காலை 10.00 மணி முதல் 3.00 மணி வரை; இடம்: வட்டாச்சியர் அலுவலகம், தூத்துக்குடி.


