News September 6, 2025

தூத்துக்குடி: நாளை நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் பல இடங்களில் நடைபெறும் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களில் ஓட்டப்பிடாரம் மற்றும் தளவாய்புரம் பகுதிகளில் நிகழ்வுகள் நடைபெற உள்ளன. (செப்டம்பர் 6) சனிக்கிழமை அன்று ஓட்டப்பிடாரம் பகுதியில் கச்சேரி மற்றும் தளவாய்புரம் அரசு மேல்நிலைப்பள்ளி குறுக்கு சாலையில் முகாம் நடத்தப்பட உள்ளது. ஓட்டப்பிடாரம் பகுதி மக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு நலன் பெறுமாறு அழைக்கப்படுகின்றனர்.

Similar News

News September 6, 2025

தூத்துக்குடி: இரவு ரோந்து காவல் அதிகாரி விபரம்

image

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட போலீசாரின் விவரத்தை வெளியிட்டுள்ளது. சாத்தான்குளம் டிஎஸ்பி ஆவுடையப்பன் தூத்துக்குடி மாவட்ட இரவு ரோந்து அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் போலீசாரின் பெயர்கள், பொறுப்புகள் மற்றும் தொடர்பு எண்கள் பட்டியலில் உள்ளன. மேலே உள்ள படத்தில் அந்த விவரங்கள் காணலாம்.

News September 5, 2025

தூத்துக்குடி: ரூ.1 லட்சம் ஊதியத்தில் விமான நிலைய வேலை.!

image

இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள ஜூனியர் நிர்வாகி பணியிடங்களுக்கு 976 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இளநிலை பொறியியல் பட்டப்படிப்பை முடிந்தவர்கள் செப்.27 க்குள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள்<> இங்கே கிளிக் செய்து <<>>விண்ணப்பிக்கலாம். BE படித்த உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

News September 5, 2025

தூத்துக்குடி: ரேஷன் கடைக்கு போறீங்களா? இத பண்ணுங்க!

image

தூத்துக்குடி மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். பயனுள்ள தகவல் மறக்காம SHARE பண்ணுங்க

error: Content is protected !!