News March 25, 2024
தூத்துக்குடி: நாளை கனிமொழி வேட்புமனு தாக்கல்

தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி நாளை (மார்ச் 026) காலை 11 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார். தூத்துக்குடியில் மீண்டும் 2வது முறையாக கனிமொழி போட்டியிடுகிறார். இன்று காலை அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். எனவே, தூத்துக்குடியில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
Similar News
News April 3, 2025
தூத்துக்குடி இரவு ரோந்து விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
News April 3, 2025
தூத்துக்குடியில் இன்று முதல் கனமழைக்கு வாய்ப்பு

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒர் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக இன்றும், நாளையும்(ஏப்.3,4) தூத்துக்குடியில் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
News April 3, 2025
சாத்தான்குளம் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வழக்கறிஞர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.