News May 14, 2024
தூத்துக்குடி : நாளை கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை 22 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (மே.15) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கி.மீ முதல் 50 கி.மீ வரை) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சமீபமாக தமிழகத்தில் ஆங்காங்கே மழைப் பொழிவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News July 10, 2025
தூத்துக்குடி: குரூப் 4 தேர்வு: 37,005 பேர் எழுதுகின்றனர்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் நாளை மறுநாள் (ஜூலை 12) அன்று குரூப் 4 தேர்வு நடைபெறவுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, ஏரல், எட்டையாபுரம் உள்ளிட்ட 10 வட்டங்களில் 127 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 37,005 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். முறைகேடுகளைத் தடுக்க 31 பறக்கும் படைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.
News July 10, 2025
தூத்துக்குடி: B.E முடித்தவர்களுக்கு ரூ.1.12 லட்சம் சம்பளத்தில் வேலை

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 1340 Junior Engineer பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, B.E / B.Tech முடித்தவர்கள் <
News July 10, 2025
குறும்பட போட்டி.. தூத்துக்குடி ஆட்சியர் அறிவிப்பு

தேசிய மனித உரிமை ஆணையம் (NHRC) 2025ம் ஆண்டிற்கான 11வது குறும்பட போட்டியை அறிவித்துள்ளது. இந்திய குடிமக்கள் எந்த மொழியிலும் (ஆங்கில வசனங்களுடன்) 3-10 நிமிட குறும்படங்களை ஆகஸ்டு 31, 2025க்குள் nhrcshortfilm@gmail.com-க்கு அனுப்பலாம். முதல் மூன்று பரிசுகளாக ரூ.2 லட்சம், ரூ.1,50,000, ரூ.1,00,000, சிறப்பு பரிசாக ரூ.50,000 வழங்கப்படும் என தூத்துக்குடி ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க