News July 9, 2025
தூத்துக்குடி: “நான் முதல்வன் திட்டத்தில்” மேலும் ஒரு சாதனை

தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள VinFast கார் தொழிற்சாலைக்கு, “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் அரசு பாலிடெக்னிக், அரசு ஐ.டி.ஐ. மாணவர்கள் 200 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அடுத்த 5 ஆண்டுகளில் இது 3,500 ஆக உயரும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டுக்கு 1.50 லட்சம் மின் வாகனங்களை |உற்பத்தி செய்ய உள்ள இந்த ஆலையில், 80% பணியாளர்கள் சுற்றுப்புற ஊர்களில் இருந்தே தேர்வு செய்யப்பட உள்ளனர்.
Similar News
News July 9, 2025
100 கட்டுமான தொழிலாளர்களுக்கு பயிற்சி

தூத்துக்குடி தொழிலாளர் நல உதவி ஆணையர் பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் அதன் உறுப்பினர்களுக்கு மேசன் கார்பெண்டர் கம்பி வளைப்பு உள்ளிட்ட 12 வகையான தொழில்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் 100 கட்டுமான தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய 7 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார
News July 9, 2025
திருச்செந்தூர் கும்பாபிஷேகத்தில் 44 பவுன் நகை திருட்டு

திருச்செந்தூர் முருகன் கோவிலில் கடந்த 7ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், கலந்து கொள்ள வந்திருந்த கோட்டாறு அறநிலையத்துறை செயல் அலுவலர் கவிதாவின் 10 பவுன் தங்க நகையும், திருச்சி புத்தூரை சேர்ந்த மீனா என்பவரிடம் 20 பவுன் தங்க நகையும், மேலும் 3 பெண்களிடம் 14 பவுன் தங்கை நகையும் என 44 பவுன் தங்க நகை திருடு போய் உள்ளது. இது சம்பந்தமாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News July 9, 2025
உள்ளூர் வங்கியில் ரூ.85,000 ஊதியத்தில் வேலை

பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.48,000 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு தேர்வு மையம் நெல்லை, மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அமைக்கப்படும். விண்ணப்பிக்க <