News September 1, 2025
தூத்துக்குடி: தமிழில் எழுத/படிக்கத் தெரிந்தால் ரூ.58,100 சம்பளம் ரெடி

திருவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் உள்ள இரவு காவலர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பங்கள் www.tnrd.tn.gov.in இணையதளத்தில் நாளை 01.09.25 முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம். விண்ணப்பங்களுக்கு கடைசி தேதி 30.09.2025. இந்த பணிக்கு மாதம் ரூ.58,100 வரை வழங்கப்படுகிறது . எழுத/ படிக்கத் தெரிந்திருந்தால் போதும். ஷேர்
Similar News
News September 4, 2025
தூத்துக்குடி துறைமுக பார்வைக்கு அனுமதி இல்லை

தூத்துக்குடி துறைமுகத்தை ஒவ்வொரு வருடமும் வ.உ. சிதம்பரனார் பிறந்த நாளன்று (செப். 5) பொதுமக்கள் இலவசமாக பார்வையிட அனுமதி வழங்கப்படும். ஆனால், 2025ம் ஆண்டு, செப்டம்பர் 5 அன்று இந்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த ஆண்டு துறைமுகத்திற்கு செல்ல முடியாது. பாதுகாப்பு காரணங்கள் அல்லது நேரடி அதிகாரிகள் அறிவுறுத்தல்கள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
News September 4, 2025
தூத்துக்குடி: ஆதார் கார்டில் திருத்தமா? இதை பண்ணுங்க

தூத்துக்குடி மக்களே ஆதார் கார்டில் இனி நீங்களே உங்களது முகவரியை அப்டேட் செய்யலாம்
▶️ <
▶️ அப்டேட் பகுதியில் ‘ADDRESS UPDATE’ என தேர்ந்தெடுங்க
▶️ அதில், உங்களது புதிய முகவரியை பதிவிடவும்
▶️ முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்
▶️ பின்னர் ரூ.50 கட்டணம் செலுத்தி புதிய முகவரியை அப்டேட் செய்யலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க
News September 4, 2025
தூத்துக்குடியில் 11 ஆசிரியர்களுக்கு விருது

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை செப்டம்பர் 5ஆம் தேதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை முன்னிட்டு ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 11 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து விருது பெற உள்ள ஆசிரியர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.