News January 11, 2026
தூத்துக்குடி: தனியார் பஸ் மோதி முதியவர் பரிதாப பலி

விளாத்திகுளம் அருகே குளத்தூர் தெற்குத் தெரு பகுதியை சேர்ந்தவர் கணேசன் (85). இவர் நேற்று முன்தினம் கீழ வைப்பார் வங்கிக்கு செல்வதற்கு குளத்தூர் பேருந்து நிலையம் ஓரமாக நின்று கொண்டிருந்தார். அப்போது சாயல்குடியில் இருந்து தூத்துக்குடி சென்ற தனியார் பேருந்து கணேசன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்து தூத்துக்குடி G.H-ல் சிகிச்சை பெற்று வந்த கணேசன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
Similar News
News January 27, 2026
தூத்துக்குடி: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு – CLICK NOW

தூத்துக்குடி மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். இதற்கு விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம் அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உடன் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். பிறருக்கும் பயன்படும் ஷேர் செய்யுங்க!
News January 27, 2026
தூத்துக்குடி: ரூ.3 லட்சம் கடன் வேண்டுமா? APPLY NOW

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ.1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
News January 27, 2026
தூத்துக்குடி அருகே வாலிபர் தற்கொலை

இராஜாபுதுக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் மகன் முத்துக்குமார்(22). இவர் 10-ம் வகுப்பு படித்து விட்டு பந்தல்கள் போடும் வேலை செய்து வரும் நிலையில் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டில் தாய், தந்தையுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மது குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறில் ஈடுபட்ட நிலையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


