News March 30, 2025

தூத்துக்குடி – சென்னை இடையே விமான சேவை அதிகரிப்பு

image

தூத்துக்குடி – சென்னை இடையே இருமார்க்கங்களிலும் தலா 4 விமான சேவைகள் இயக்கப்பட்டு வந்தன. இதனிடையே, அனைத்து நாள்களிலும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு தூத்துக்குடி – சென்னை இடையே இன்று (மார்ச் 30) முதல் கூடுதலாக இருமார்க்கங்களிலும் 3 விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டு இருமார்க்கங்களிலும் தலா 7 விமான சேவைகள் இயக்கப்படும் என தூத்துக்குடி விமான நிலையம் தெரிவித்துள்ளது.

Similar News

News April 1, 2025

சென்னையில் ரூ.2,025 கோடி சொத்து வரி வசூல்

image

சென்னை மாநகராட்சியில் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளர்கள் சொத்து வரி செலுத்தி வருகின்றனர். கடந்த நிதியாண்டில் மொத்தம் ரூ.2,025 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி வரலாற்றிலேயே ரூ.2,000 கோடிக்கு மேல் சொத்து வரி வசூலிக்கப்பட்டது இதுவே முதன்முறையாகும். இது முந்தைய நிதியாண்டைவிட ரூ.275 கோடி அதிகம்.

News April 1, 2025

உங்கள் குடும்பத்திற்கு வற்றாத செல்வம் தரும் சிறந்த தலம்

image

சென்னை திருவல்லிக்கேணியில் பிரசித்தி பெற்ற பார்த்தசாரதி கோயில் உள்ளது. இங்கு வந்து பெருமாளை மனமுருக வேண்டினால், கணவன்- மனைவி இடையே சண்டை சச்சரவு என எதுவும் இல்லாமல் குடும்ப ஐஸ்வர்யம் மேம்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. அதுமட்டுமல்லாமல், திருமண வரம், குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். உங்களுக்கு தெரிந்த தம்பதிகளுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க.

News April 1, 2025

சென்னையில் நாளை மழை பெய்ய வாய்ப்பு

image

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (02-04-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!