News August 31, 2025
தூத்துக்குடி சுங்க சாவடியில் சுங்க கட்டணம் உயர்வு

தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் இன்று(ஆக.31) நள்ளிரவு முதல் சுங்க கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கார்கள் செல்வதற்கு ஒரு முறை கட்டணமாக ரூ.90 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.5 உயர்ந்து ரூ.95 என கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இந்த கட்டண உயர்வு செப்டம்பர் 1-ம் தேதி முதல் அமலாகிறது என கூறப்படுகிறது.
Similar News
News August 31, 2025
தூத்துக்குடி: ரூ.1.40 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை!

தேசிய நீர்மின்சாரக் கழகத்தில் (NHPC) உதவி ராஜ்யசபா அதிகாரி, ஜூனியர் இன்ஜினியர், கணக்காளர், மேற்பார்வையாளர், இந்தி மொழிபெயர்ப்பாளர் உள்ளிட்ட 248 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிப்ளமோ, B.E, CA படித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். ரூ.27,000 முதல் ரூ.1,40,000 வரை சம்பளம் வழங்கப்படவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கில் சென்று செப். 2 முதல் அக்.1க்குள் விண்ணப்பிக்கவும். SHARE
News August 31, 2025
தூத்துக்குடியில் தமிழ் தெரிஞ்சா போதும்.. ரூ.58,100 சம்பளம்!

ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் திருவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, சாத்தான்குளம் பகுதிகளில் இரவு காவலர் பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு சம்பளமாக மாதம் ரூ.15,700 முதல் ரூ.58,100 வழங்கப்படும். தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஆர்வமுள்ளவர்கள் <
News August 31, 2025
ஆன்லைன் வேலை வாய்ப்பு மோசடி – தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

சமூக வலைத்தளங்களில் வரும் போலியான வேலைவாய்ப்பு விளம்பரங்களை நம்பி சந்தேகமான இணைப்புகளை கிளிக் செய்வதை தவிர்க்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சந்தேகப்படும் சூழ்நிலைகளில் 1930 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது cybercrime.gov.in இணையதளத்தில் புகார் அளிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.