News September 27, 2025

தூத்துக்குடி: சீமானுக்கு சி.த., கடும் கண்டனம்

image

எம்ஜிஆரை பற்றி இழிவாக பேசியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் கடும் கண்டனத்தை அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார். “நானும் அரசியலில் இருக்கிறேன் என்பதை காட்டிக் கொள்வதற்காக, மறைந்த அரசியல் தலைவர்களின் அரசியல் பங்களிப்பு தொண்டு தெரியாமல் அவர்களைப் பற்றி தரக்குறைவாக பேசுவதை சீமான் தவிர்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Similar News

News January 2, 2026

தூத்துக்குடி: மின்சாரம் தாக்கி இளைஞர் பரிதாப பலி

image

எப்போதும் வென்றான் அருகே உள்ள கீழச்செய்த்தலை கிராமம் கீழத்தெருவைச் சேர்ந்வர் மகாராஜா (24). இவர் இன்று அதிகாலை தனது வீட்டில் மோட்டார் சுவிட்சை போடும்போது, மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு  அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து எப்போதும் வென்றான் காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 2, 2026

தூத்துக்குடி: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு?

image

தூத்துக்குடி மக்களே, நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என GoogleMap வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <>Tamil Nilam<<>> என்ற செயலியில் Location-ஐ ON செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற இடத்தை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE பண்ணுங்க

News January 2, 2026

திருச்செந்தூரில் ஐயப்ப பக்தர்கள் வேன் கவிழ்ந்து விபத்து

image

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் பலர் திருச்செந்தூருக்கு வந்து செல்கின்றனர். இன்று அதிகாலை சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் வேன் ஒன்று திருச்செந்தூர் நோக்கி வந்தது. திருச்செந்தூர் அருகே வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள வாய்க்காலில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 13 ஐயப்ப பக்தர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் திருச்செந்தூர் G.H-ல் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

error: Content is protected !!