News January 21, 2026

தூத்துக்குடி: சிறுமியிடம் அத்துமீறிய முதியவர் கைது

image

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த 68 வயது முதியவரான தேவராஜ் பிச்சை என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தான்குளம் அனைத்து மகளிர் போலீசார் போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிந்து முதியவரை கைது செய்தனர்.

Similar News

News February 3, 2026

தூத்துக்குடி: இனி டாக்டர் பீஸ் FREE..!

image

தூத்துக்குடி மக்களே, FEES இல்லாம மருத்துவரை பார்க்க வழி இருக்கு. அரசின் eSanjeevani செயலியை <>இங்கு கிளிக்<<>> செய்து Install பண்ணுங்க. இதில் மருத்துவர்களிடம் வீடியோ காலில் காய்ச்சல், சளி, தலைவலி, கண்பார்வை, சுகர், பிரசர், கர்ப்பகால ஆலோசனைகள் வழங்கி முடிவில் டிஜிட்டல் மருத்து சீட் வழங்கப்படும். இதனால் உங்களுக்கு தேவையில்லாத செலவு குறையும். வீட்டில் இருந்தே தீர்வு. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News February 3, 2026

தூத்துக்குடி: இன்று ஒரு நாள் மட்டும் பொதுமக்களுக்கு அனுமதி

image

தூத்துக்குடி மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தின் 79-வது நிறுவனம் இன்று கொண்டாடப்பட உள்ளது. இதனால் இன்று(பிப்.3) காலை 10 மணி முதல் மாலை 4 வரை மத்திய கடல்மீன்வள ஆராய்ச்சி நிலையத்தை பொதுமக்கள், மாணவர்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இங்கு கடல் மீன்வள ஆராய்ச்சிகள், கடல் பல்லுயிர் பெருக்கம் குறித்த கண்காட்சி, புதியவகை மீன் வளர்ப்பு குறித்து அறிந்து கொள்ள நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.

News February 3, 2026

தூத்துக்குடி: வாலிபரை எரித்துக் கொன்ற டிரைவருக்கு ஆயுள்

image

தூத்துக்குடி ஆரோக்கியபுரம் பகுதியைச் சேர்ந்த மரியசுரேஷ்(35) என்பவரை முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த டிரைவர் ஜெபராஜ்(62) 2017-ம் ஆண்டு பெட்ரோலை ஊற்றி எரித்துக் கொன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தூத்துக்குடி 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அதில் ஜெபராஜிக்கு ஆயுள் தண்டணை விதித்து நேற்று நீதிபதி பிரீத்தா தீர்ப்பளித்தார்.

error: Content is protected !!