News January 5, 2026

தூத்துக்குடி: சிறுமிக்கு பாலியல் தொல்லை.. மின் ஊழியர் கைது

image

தூத்துக்குடி தாளமுத்து நகர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (40) என்பவர் மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இநநிலையில் இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள வீட்டில் மின்சார வேலை பார்ப்பதற்காக சென்றபோது, அங்கு உள்ள சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் வழக்கு பிரிந்து அவரை கைது செய்தனர்.

Similar News

News February 12, 2026

தூத்துக்குடி இளைஞர்களே நாளை மிஸ் பண்ணாதீங்க…!

image

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் தொழில்நெறி வழிகாட்டு மையம் ஆகியவை இணைந்து வேலையில்லாத இளைஞர்கள் பயன்பெறும் வகையில் நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நடைபெறும் இந்த முகாமில் வேலை நாடுவோர் கலந்து கொண்டு பயன்பெற தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் கேட்டுக் கொண்டுள்ளார். ஷேர்…!

News February 12, 2026

தூத்துக்குடி: அமைச்சர் வழக்கு ஒத்திவைப்பு

image

தற்போது அமைச்சராக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்த வழக்கு தூத்துக்குடியில் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணை நேற்று வந்த போது வழக்கினை வரும் 16ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

News February 12, 2026

தூத்துக்குடி அரசு அலுவலரை கடித்த பாம்பு

image

தூத்துக்குடி, புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் மாரியப்பன் இன்று பணியில் இருந்தபோது அருகில் ஜன்னல் ஓரத்தில் இருந்த  பீரோவில் மேல் பகுதியில் இருந்த பாம்பு ஒன்று, மாரியப்பன் மேல் விழுந்தது மட்டுமின்றி அவரது  வலது கையின் கட்ட விரலை கடித்துள்ளது. இதனால் மாரியப்பன் மயங்கி கீழே விழுந்தார் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுக்குறித்து போலீசார் விசாரணை.

error: Content is protected !!