News February 24, 2026
தூத்துக்குடி: சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; கோர்ட் அதிரடி

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத்தில் கடந்த 2024 ம் ஆண்டு 14 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக, ஜெயக்குமார் (38) என்பவர் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்திய நீதிமன்றம் அவருக்கு 27 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் 15 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் இருந்து அழைத்து சென்று சிறையில் அடைக்கப்பட்டனர்.
Similar News
News February 25, 2026
BREAKING தூத்துக்குடியில் விஷவாயு தாக்கி ஒருவர் பலி

தூத்துக்குடி ஆதிபராசக்தி நகர் பகுதியில் பாதாள சாக்கடை குழியில் உள்ள மோட்டரை செல்போனில் படம் எடுக்கும் போது நெல்லை மாவட்டம் பருத்தி குளம் பகுதியைச் சேர்ந்த ராஜா என்ற தூய்மை பணியாளர் விஷ வாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் சங்கர் என்ற மற்றொரு தூய்மை பணியாளர் மயங்கிய நிலையில் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News February 25, 2026
ஸ்ரீவைகுண்டம்: நல்லகண்ணு மறைவால் பள்ளிக்கு விடுமுறை

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றங்கரையை பூர்வீகமாகக் கொண்ட நல்லகண்ணு இன்று உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆகிய இரு பள்ளிகளுக்கும் நாளைய தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
News February 25, 2026
தூத்துக்குடியில் பிப்ரவரி 27ல் கல்விக் கடன் முகாம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்ததாவது, பொருளாதார சிக்கலால் உயர்கல்வி தொடர முடியாத மாணவர்களுக்கு உதவ, வங்கியாளர்கள் இணைந்து கல்விக் கடன் வழங்கும் முகாம் பிப்.27 ம் தேதி, காலை 10 மணிக்கு விக்டோரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும். மாணவர்கள் தேவையான ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம். இம்முகாம் உயர்கல்விக்கான சிறந்த வாய்ப்பாகும்.


