News January 23, 2025
தூத்துக்குடி சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவர் கைது

கோவில்பட்டி பங்களா தெரு பகுதியை சேர்ந்தவர் திருப்பதி (72). இவர் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி வேனில் கிளீனராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் தினமும் பள்ளிக்கு வேனில் வரும் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், திருப்பதியை கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News October 16, 2025
BREAKING: தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு விடுமுறை

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நேற்று முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக விளாத்திகுளம், கயத்தாறு, தூத்துக்குடி நகர் பகுதிகளில் கனத்த மழை பெய்கிறது. இதனிடையே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மழையின் காரணமாக இன்று (16.10.2025) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் இலம்பகவத் உத்தரவிட்டுள்ளார்.
News October 16, 2025
தூத்துக்குடி மக்களே உஷாராக இருங்க

ஆன்லைன் மோசடி குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு செய்தியை வெளியிட்டுள்ளது. அதில் பொதுமக்கள் தங்கள் போனில் சந்தேகத்துக்கிடமான போலியான கால், SMS, வாட்ஸ்அப் செய்திகளை கண்டால் அது தொடர்பாக சஞ்சார் சாத்தி (<
News October 16, 2025
தூத்துக்குடி சட்டப்பணிகள் ஆணை குழுவில் வேலைவாய்ப்பு

தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழுவில் சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்கள் பணிக்கு 37 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்பங்களை தூத்துக்குடி நீதிமன்ற வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து அதனை தகுந்த சான்றிதழ் உடன் இம்மாதம் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட சட்டப் பணிகள் ஆணை குழு கேட்டுக் கொண்டுள்ளது.