News November 6, 2025
தூத்துக்குடி: கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள்

கயத்தாறு அருகே உள்ள அய்யனார் ஊத்தை சேர்ந்தவர் அண்ணாமலை. கடந்த 2019-ம் ஆண்டு முன் விரோதம் காரணமாக இவரை இவரது உறவினர்களான உடையார் மற்றும் கோதண்ட ராமர் ஆகியோர் வெட்டி கொலை செய்தனர். இது சம்பந்தமான வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று உடையார் மற்றும் கோதண்ட ராமனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
Similar News
News February 1, 2026
தூத்துக்குடியில் 2 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்

ஆத்தூர் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்றதாக தூத்துக்குடியை சேர்ந்த அருள்ராஜ் (28) கைதாகினார். விளாத்திகுளம் மகளிர் காவல் நிலைய பகுதியில் போக்சோ வழக்கில் விளாத்திகுளத்தை சேர்ந்த அப்பண்ணசாமி (37) கைதாகி இருந்தார். இவர்கள் இருவரையும் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் (1982) கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி பரிந்துரையின்படி கலெக்டர் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
News February 1, 2026
தூத்துக்குடியில் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பு

விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த சின்ன கருப்பசாமி (53) என்பவருக்கு சொந்தமான வீடு எட்டையபுரம் பகுதியில் உள்ளது. இவர் வீட்டில் அனுமதி பெறாமல் தொழிலாளர்களை பயன்படுத்தி பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து போலீசார் அங்கு சென்று அங்கு பணியில் ஈடுபட்ட 8 பேர் மற்றும் ரூ.10 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்து கைது செய்தனர்.
News February 1, 2026
தூத்துக்குடி: பெண்களுக்கு தள்ளுபடியுடன் ரூ.3 லட்சம் கடன்!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு கடன் வழங்கப்படும். இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <


