News November 18, 2024
தூத்துக்குடி குறைதீர் கூட்டம் மனுக்கள் விவரம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (நவ.19) நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, பட்டாமாறுதல் உள்ளிட்ட பல்வேறுகோரிக்கைகள் குறித்து பொதுமக்களிடமிருந்து 487 மனுக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடமிருந்து 30 மனுக்களை மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து, மனுக்கள் மீதுஉரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Similar News
News September 11, 2025
தூத்துக்குடி: டிகிரி போதும் ரூ.78,000 சம்பளத்தில் வங்கி வேலை..!

இந்திய ரிசர்வ் வங்கியில் Grade B ஆபீசர் பணியிடங்களுக்கு 120 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு சம்பளமாக ரூ.78,450 வரை வழங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் 10.09.2025 முதல் 30.09.2025 ம் தேதிக்குள்<
News September 11, 2025
தூத்துக்குடியில் 13 காவலர்கள் மாற்றம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 55 காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் காவல் நிலைய எழுத்தர்கள் உயர் அதிகாரிகள் கேட்கும் அனைத்து ஆவணங்களையும் உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என்பது சட்டம். ஆனால் காவல் நிலைய எழுத்தர்கள் சரிவர செயல்படாமல் இருந்தனர். எனவே அதன் பேரில் அந்த 13 எழுத்தர்களும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து எஸ்பி ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டுள்ளார்.
News September 11, 2025
தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டப் பணிகள் ஆணை குழுவின் சார்பில் வரும் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டம் முழுவதும் மொத்தம் 15 அமர்வுகள் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு தீர்க்கப்படாத வழக்குகளை தீர்க்கும் வகையில் சுமூக தீர்வு வழங்கப்படும் என மாவட்ட நீதிபதி வசந்தி தெரிவித்துள்ளார்.