News February 5, 2026
தூத்துக்குடி: குரூப் -2 தேர்வர்கள் கவனத்திற்கு

தூத்துக்குடியில் உள்ள புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிப்.8 அன்று நடைபெறும் குரூப் 2, 2ஏ தேர்வை காலையில் 236 பேர், மாலையில் 247 பேர் எழுதுகின்றனர். தேர்வு எழுதுபவர்கள் காலை 8.30 மணி, மதியம் 2 மணிக்குள் தேர்வு மையத்திற்குள் ஆஜராக வேண்டும். இதற்காக சிறப்பு பேருந்து இயக்கப்படும் நிலையில் செல்போன், ஸ்மார்ட் வாட்ஸ், குறிப்பேடு, கைப்பை கொண்டு செல்ல அனுமதி இல்லை என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 15, 2026
தூத்துக்குடி மாவட்டம் பற்றிய சுவாரசிய தகவல்கள்

1.மாவட்டமாக உருவெடுத்த நாள்: 20 அக்டோபர் 1986
2.மக்கள் தொகை: 19.19 லட்சம் (Approx.)
3.சட்டமன்ற தொகுதிகள்: 6
4.மக்களவை தொகுதிகள்: 1
5.மொத்த வாக்காளர்கள்: 14,90,425
6.இந்தியாவின் 10வது பெரிய துறைமுகம். ஆண்டுக்கு 1 மில்லியன் சரக்கு கையாள்கிறது.
7.ஆழ்கடல் முத்துக்குளிப்புக்கு சிறந்து விளங்கியதால் முத்து நகரம் என அழைக்கப்படுகிறது.
▶️ இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க
News February 15, 2026
தூத்துக்குடி: 8 வயது சிறுமிக்கு முதியவர் பாலியல் தொல்லை

தூத்துக்குடி டவுன் பகுதியில் உள்ள மகளிர் பள்ளியில் படிக்கும் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 65 வயது முதியவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிறுமி தன் பெற்றோரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, பள்ளி நிர்வாகம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தது. போலீசார் விசாரணை நடத்தி, முதியவரை பிடித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
News February 14, 2026
தூத்துக்குடி : இனி சிலிண்டர் புக் பண்ண மிஸ்டு கால்…!

தூத்துக்குடி மக்களே (Bharatgas, HP, Indane) கேஸ் சிலிண்டர் புக் பண்ண இனி ஒரு மிஸ்டு கால் கொடுத்தா போதும்.
Bharatgas: 77150 12345
HP: 94936 02222
Indane:84549 55555
இந்த எண்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தா… கேஸ் புக் பண்ண SMS உங்க போனுக்கு வரும். இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…!


