News March 29, 2025
தூத்துக்குடி: குடும்ப தகராறில் தீக்குளித்து தற்கொலை

செய்துங்கநல்லூர் அருகே உள்ள விட்டிலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவருக்கு ஈஸ்வரி (50) என்ற மனைவியும், 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் ஈஸ்வரி திடீரென மண்எண்ணையை ஊற்றி தீவைத்துக்கொண்டார். நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்த நிலையில் நேற்று (மார்ச்-28) அதிகாலையில் அவர் பரிதாபமாக இறந்தார். போலீசார் விசாரணையில் குடும்ப தகராறில் தற்கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
Similar News
News April 1, 2025
தூத்துக்குடி இரவு ஹலோ போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் இப்போது வெளியிட்டுள்ளது.
News March 31, 2025
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

சமீபகாலமாக ஆன்லைன் விளையாட்டுகள் மூலமாக மோசடிகள் பெருகி வருவது குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் துறை இன்று (மார்ச்.31) விழிப்புணர்வு செய்தி வெளியிட்டுள்ளது. அதில், “பண ஆபத்தை விளைவிக்கும் ஆன்லைன் விளையாட்டை விளையாடுவதை தவிர்ப்பீர்; உங்கள் பணத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்துவீர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. *நண்பர்களுக்கும் பகிர்ந்து உஷார் படுத்துங்கள்*
News March 31, 2025
தூத்துக்குடி : விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண் அடுக்கு திட்டத்தின்கீழ் விவசாயிகளின் நிலஉடைமை விவரங்கள் கிராமங்கள் தோறும் கட்டணமின்றி வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. பதிவு செய்யாத விவசாயிகள் ஆதார் எண் ,ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைபேசி, பட்டா நகளுடன் அணைத்து பொதுசேவை மையத்தில் ஏப்ரல் 15ம் தேதிக்குள் பதிவு செய்யவேண்டுமென வேளாண் இணை இயக்குனர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.