News December 21, 2025

தூத்துக்குடி: கிறிஸ்மஸ் ஸ்டார் மாட்ட முயன்றவர் பலி!

image

தூத்துக்குடி மடத்தூர் முருகேசன் நகரை சேர்ந்தவர் சாந்தகுமார் (60). இவர் நேற்று காலை தனது வீட்டின் முன்பு கிறிஸ்மஸ் ஸ்டார் ஒன்றினை மாட்ட முயன்றுள்ளார். அப்போது தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்த இவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்ற்ரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து சிப்காட் போலீசார் விசாரணை நடத்தினர்.

Similar News

News December 25, 2025

தூத்துக்குடி: மாடு குறுக்கே வந்ததால் பறிபோன உயிர்

image

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள இடைச்சிவிலை மோடி நகர் பகுதியில் மாடு குறுக்கே வந்ததில் கூட்டுறவு சங்கத்தின் பொறுப்பு செயலாளர் பென்சிகர் என்பவர் இருசக்கர வாகனத்தில் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். தொடர்ந்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற போது அவர் அங்கு உயிரிழந்தார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 25, 2025

BREAKING தூத்துக்குடி: முத்து நகர் ரயில் நேரம் மாற்றம்

image

தூத்துக்குடி – சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் முத்துநகர் அதிவேக விரைவு இரயில் நேரம் வருகிற ஜன.1ஆம் தேதி முதல் மாற்றம் செய்யப்படுகிறது. இந்த ரயில் தூத்துக்குடியில் இருந்து இரவு 8:40மணிக்கு பதில் 2026 ஜனவரி 1ஆம் தேதி முதல் இரவு 9:05 மணிக்கு புறப்படும். மறுநாள் காலை 6:23 மணிக்கு தாம்பரம் செல்லும், காலை 7:35 மணிக்கு எழும்பூர் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. *SHARE

News December 24, 2025

தூத்துக்குடி: சுகாதாரத்துறையில் வேலைவாய்ப்பு

image

சுகாதாரத்துறையில் உள்ள காலியிடங்களை நிரப்ப தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் உதவி அறுவை சிகிச்சை டாக்டர் (பொது) பிரிவில் மகப்பேறு 182, தடயவியல் 50, முதியோர் மருத்துவம் 10, இதய ஆப்பரேஷன் 20, ரேடியாலஜி 37 என மொத்தம் 299 இடங்கள் உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் செய்து<<>> முழுவிவரங்களை தெரிந்து கொண்டு ஜன.7 க்குள் விண்ணப்பிக்கலாம். SHARE IT

error: Content is protected !!