News August 26, 2025

தூத்துக்குடி காவல்துறை சார்பில் புதிய கைப்பந்து மைதானம்

image

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக புதிதாக அமைக்கப்பட்ட கைப்பந்தாட்ட அரங்கத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய முன்பாக உள்ள மைதானத்தில் காவல்துறை பாய்ஸ் அன்ட் கேர்ள்ஸ் கிளப்-ன் மாணவ மாணவிகளுக்கு பயன்படும் வகையில் இதனை காவல் உதவி கண்காணிப்பாளர் திறந்து வைத்தார்.

Similar News

News August 26, 2025

கோவில்பட்டி: பட்டாசு தயாரித்த 3 பேர் கைது

image

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை ஆறுமுகம் நகர் பகுதியில் அனுமதியின்றி வீட்டில் வைத்து பட்டாசு திரி தயாரிப்பதாக கழுகுமலை காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அங்கு சென்ற காவல்துறையினர் வீடு வீடாக சோதனையில் ஈடுபட்டனர். அதில் ஒரு வீட்டில் அனுமதியின்றி பட்டாசு திரி தயாரிப்பது தெரிய வந்தது. இதையடுத்து சண்முகசுந்தரம், செந்தில்குமார், செல்வி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

News August 26, 2025

தூத்துக்குடியில் 10 உழவர் நல மையம் அமைப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்திற்கு 10 முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் அமைக்க ரூ.39 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார். இம்மையங்கள் மூலம் விதைகள், உரங்கள், பூச்சி-நோய் மேலாண்மை, நவீன தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளன. மேலும் வேலையில்லா வேளாண் பட்டதாரிகள் சுயதொழில் செய்வதற்கும் வாய்ப்பு கிடைக்கும்.

News August 25, 2025

தூத்துக்குடி: ரூ.64,480 சம்பளத்தில் வேலை.. நாளை கடைசி!

image

SBI வங்கியில், தமிழ்நாட்டில் காலியாக உள்ள 380 ஜூனியர் அசோசியேட்ஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். இதில் ரூ.24,050 – 64,480 வரை ஊதியம் வழங்கப்படும் நிலையில் ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்ற 20- 28 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு மதுரை, நாகர்கோவில். ராமநாதபுரம், நெல்லை, விருதுநகரில் நடைபெறும். ஆர்வமுள்ளவர்கள்<> #இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!