News June 6, 2024
தூத்துக்குடி: கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி

தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு ஐந்தாவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி வரும் 10ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய்; தடுப்புத் திட்டத்தின் கீழ் சுமார் 1,12,000 கால்நடைகளுக்கு இலவசமாக கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
Similar News
News August 23, 2025
திருச்செந்தூரில் ரூ.4.07 கோடி வசூல்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இந்த பணியில் சுமார் ரூ.4.07 கோடி பணம், 1.05 கிலோ தங்கம், 18 கிலோ வெள்ளி, 17 கிலோ பித்தளை, 1218 அயல்நாட்டு நோட்டுகள் என உண்டியல் மூலம் காணிக்கையாக கிடைக்கப்பெற்றது என கோவில் அறங்காவலர் அருள்முருகன் தெரிவித்துள்ளார்.
News August 22, 2025
தூத்துக்குடி பெண்கள் ரூ.5000 மானியம் பெற அழைப்பு

தூத்துக்குடி மாவட்டத்தி வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள மகளிரின் வாழ்வாரத்தை மேம்படுத்த உலர் மற்றும் ஈர மாவு அரைக்கும் இயந்திரம் வழங்க அதிகபட்சமாக ரூ.5,000 மானியத்தொகை வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆர்வமுள்ள பெண்கள் இங்கே கிளிக் செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஆக.31 க்குள் விண்ணப்பிக்கலாம். SHARE IT
News August 22, 2025
தூத்துக்குடி: உங்க போன் காணமா? இதை பண்ணுங்க!

தூத்துக்குடி மக்களே; உங்க மொபைல் போன் காணாமல் போனாலும் (அ) திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <