News September 18, 2025

தூத்துக்குடி: கல்குவாரியில் மூழ்கி தொழிலாளி பலி

image

தூத்துக்குடி மாவட்டம் அகிலாண்டபுரத்தை சேர்ந்த குருசாமி (35), அருகிலுள்ள கல்குவாரியில் குளிக்க சென்றுள்ளார். நீண்ட நேரம் அவரை காணவில்லை என்பதால் கயத்தாறு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின் கழுகுமலை தீயணைப்பு படையினர் தண்ணீரில் மூழ்கி குருசாமியை தேடும் பணியில் ஈடுப்பட்டனர். நேற்று மாலை 5 மணியளவில் குருசாமி உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்து கயத்தாறு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Similar News

News September 18, 2025

கோவில்பட்டி வழியாக சென்னைக்கு முழு ஏசி ரயில்

image

கோவில்பட்டி வழியாக சென்னை சென்ட்ரலில் இருந்து செங்கோட்டை வரை முழுமையாக குளிரூட்டப்பட்ட பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயில் செப்டம்பர் 24, அக்டோபர் 1, 8, 15, 22 ஆகிய புதன்கிழமைகளில் மாலை 3.10 மணிக்கு புறப்படும். மறு மார்க்கத்தில் செப்டம்பர் 25 அக்டோபர் 2, 9, 16, 23 ஆகிய வியாழக்கிழமைகளில் இரவு 9 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது.

News September 18, 2025

தூத்துக்குடி: உங்க ரேஷன் கார்டடை CHECK பண்ணுங்க…

image

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
NPHH: சில பொருட்கள் மட்டும்.. உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய<> இங்கு க்ளிக்<<>> செய்யுங்க…மேலும் தகவல்களுக்கு 9677736557,1800-599-5950. எல்லோருக்கும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

News September 18, 2025

தூத்துக்குடி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. கலெக்டர் அறிவிப்பு

image

தூத்துக்குடிமாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி, வேப்பலோடை, திருச்செந்தூர், நாகலாபுரம், ஏரல் அரசு ஐடிஐ-கள் மற்றும் தனியார் ஐடிஐகளில் அரசு ஒதுக்கீட்டில் நேரடி மாணவர் சேர்க்கையில் சேர கால அவகாசம் செப். 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 8, 10ம் வகுப்பு படித்தவர்கள் இதில் சேரலாம். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள ஐடிஐ தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு நேரில் வர மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!