News April 24, 2024
தூத்துக்குடி: கலெக்டர் கடும் எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி கோடை வெயிலின் தாக்கம் இருப்பதால் பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருப்பதோடு நண்பகல் வேளையில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் கோடை வெயிலால் ஏற்படும் பாதிப்புகளுக்கு தனியாக படுக்கை ஒதுக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒஎஸ்ஆர் கரைசல் வழங்கப்பட்டு வருகிறது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 20, 2025
தூத்துக்குடி: நீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு

தூத்துக்குடி மக்களே, தமிழக நீதிமன்றங்களில் ASSISTANT PROGRAMMER பணியிடங்களுக்கு 41 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கம்ப்யூட்டர் துறையில் டிகிரி (B.E/M.E உட்பட) முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் செப். 9க்குள்<
News August 20, 2025
தூத்துக்குடி: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்ற எளிய வழி!

உங்களது இடம் (அ) வீடு கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற <
✅கூட்டு பட்டா,
✅விற்பனை சான்றிதழ்,
✅நில வரைபடம்,
✅சொத்து வரி ரசீது,
✅மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE பண்ணுங்க!
News August 20, 2025
தூத்துக்குடியில் ஒரு ஸ்ரீரங்கம்! உங்களுக்கு தெரியுமா?

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரில் உள்ள ஆதிநாதர் ஆழ்வார் கோயில் புராண சிறப்புகளை கொண்டது. நம்மாழ்வார் அவதாரம் செய்த புண்ணிய பூமி ஆகும். நவ திருப்பதிகளில் சிறப்பு வாய்ந்தது. ஸ்ரீரங்கம் போல இங்கு அரையர் சேவை நடைபெறும். அமாவாசை மட்டுமல்லாது அனைத்து நாட்களிலும் முன்னோர்களுக்கு திதி அளிக்கப்படும். இதனால் முன்னோர்கள் சொர்க்கம் செல்வார்கள் என்பது ஐதீகம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க