News March 27, 2024
தூத்துக்குடி: கனிமொழி சொத்து மதிப்பு எவ்வளவு?

தூத்துக்குடி எம்பி வேட்பாளர் கனிமொழி தனது வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தனக்கு ரூ.1 கோடியே 37 லட்சத்து 16 ஆயிரத்து 290 மதிப்பிலான 3 கார்கள் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் 704 கிராம் தங்கம், 13.03 காரட் வைரம் உள்ளிட்டவைகள் வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அந்த நகைகளின் மதிப்பு ரூ.55 லட்சத்து 37 ஆயிரத்து 455 ஆகும்.
Similar News
News November 6, 2025
தூத்துக்குடி: கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள்

கயத்தாறு அருகே உள்ள அய்யனார் ஊத்தை சேர்ந்தவர் அண்ணாமலை. கடந்த 2019-ம் ஆண்டு முன் விரோதம் காரணமாக இவரை இவரது உறவினர்களான உடையார் மற்றும் கோதண்ட ராமர் ஆகியோர் வெட்டி கொலை செய்தனர். இது சம்பந்தமான வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று உடையார் மற்றும் கோதண்ட ராமனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
News November 5, 2025
தூத்துக்குடி இரவு ஹலோ போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
News November 5, 2025
தூத்துக்குடி: G Pay / PhonePe பயன்படுத்துகிறீர்களா?

தூத்துக்குடி மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க


