News February 14, 2026
தூத்துக்குடி: கஞ்சா விற்ற பள்ளி மாணவர் கைது

தூத்துக்குடி, கோவில்பட்டி பகுதியில் ரோந்து சென்ற போலீசார், கோவில் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்ற இளம்சிறாரை சோதனை செய்ததில் 100 கிராம் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருவது தெரியவந்தது. பின்னர் திருநெல்வேலியில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
Similar News
News February 19, 2026
திருச்செந்தூர் கொடியேற்றம் தேதி அறிவிப்பு…!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா வரும் 21ம் தேதி வெகு விமர்சையாக தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து காலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
News February 19, 2026
BREAKING தூத்துக்குடிக்கு மஞ்சள் அலர்ட்…!

தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், ஏற்கனவே தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும் என வானிலை மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக நாளை மறுதினம் (பிப்.21) தூத்துக்குடி மாவட்டத்திற்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு ஏற்ப பொதுமக்கள் தங்களது திட்டங்களை வகுத்துக் கொள்வது நல்லது. SHARE!
News February 19, 2026
தூத்துக்குடி: இழந்த பணத்தை மீட்க புகார் எண்கள்!

தற்போது உள்ள டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. இதில் தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!


