News January 31, 2026

தூத்துக்குடி: உங்களிடம் டூவீலர், கார் உள்ளதா?

image

தூத்துக்குடி மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <>இங்கு கிளிக் <<>>செய்து மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் ரசீது சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். SHARE பண்ணுங்க

Similar News

News February 8, 2026

தூத்துக்குடி: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

தூத்துக்குடி மக்களே வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். SHARE

News February 8, 2026

தூத்துக்குடியில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 19 ஆண்கள், 3 பெண்கள், 5 மீனவ இளைஞர்கள் என மொத்தம் 27 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 10-ம் வகுப்பு படித்த 18 முதல் 45 வயது உடையவர்கள் வரும் 12-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை தூத்துக்குடியில் உள்ள ஆயுதப்படை அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது

News February 8, 2026

தூத்துக்குடி எஸ்பி எச்சரிக்கை

image

தூத்துக்குடியில் நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு விசாரணைக்கு ஆஜராகாத 99 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 17 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். 20 குற்றவாளிகள் மீது பிணைப்பத்திரம் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!