News December 24, 2025
தூத்துக்குடி: உங்களது Certificate-ஐ உடனே பெறுவது இனி ஈஸி!

தூத்துக்குடி மக்களே; 10th, 12th, Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற E-பெட்டகம் என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர் செய்யுங்க..
Similar News
News January 1, 2026
தூத்துக்குடி: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்!

தூத்துக்குடி மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.மீறினால் தூத்துக்குடி வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000479, 9445000481, 9445000480 புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.
News January 1, 2026
தூத்துக்குடி: இளம்பெண் கடிதம் எழுதிவிட்டு தூக்கிட்டு தற்கொலை?

கீழவைப்பார் கிராமத்தைச்சேர்ந்த மெரின் என்பவரின் மனைவி இன்ஃபன்ட் தீபிகா (34). இன்ஃபன்ட் தீபிகாவிற்கு சில வருடங்களாக சர்க்கரை நோய் பாதிப்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது, இதனால் மனவிரக்தியில் இருந்து வந்த இன்பன்ட் தீபிகா தனது கணவர் மெரினுக்கு தனது குழந்தையை நன்றாகப் பார்த்துக் கொள்ளுமாறு கடிதம் எழுதி வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து குளத்தூர் போலீசார் விசாரணை.
News December 31, 2025
தூத்துக்குடி: ரயில் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

நாசரேத் அருகே உள்ள தேமான்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (68). இவர் இன்று காலை வயல் வேலைக்கு செல்வதற்காக நாசரேத் – ஆழ்வார்திருநகரி இடையே உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றுள்ளார். அப்போது திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


