News January 17, 2026

தூத்துக்குடி: இளைஞர் சரமாரியாக குத்தி கொலை

image

திருச்செந்தூர் பகுதியில் ஏழுமலை வாசன் (27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது பக்கத்து வீட்டில் இசக்கி ராஜா (40) என்பவர் வசித்து வந்துள்ளார். இருவருக்கும் ஒரே மின்இணைப்பு என்பதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், இசக்கி ராஜா, ஏழுமலை வாசனை நேற்று கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ஏழுமலை வாசன் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த திருச்செந்தூர் போலீசார் இசக்கி ராஜாவை கைது செய்தனர்.

Similar News

News February 10, 2026

தூத்துக்குடி மாநகராட்சி முக்கிய அறிவிப்பு

image

தூத்துக்குடி மாநகராட்சி பொதுமக்களின் குறைகளை எளிதில் தீர்க்கும் வகையில் மண்டல வாரியாக பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தை நடத்தி வருகிறது. அந்த வகையில் நாளை (பிப்.10) மேற்கு மண்டல பகுதி மக்களுக்கு மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் வைத்து மேயர் ஜெகன் தலைமையில் நடைபெற உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

News February 10, 2026

தூத்துக்குடி: பெண்களுக்கு இலவச தையல் மிஷின் வேண்டுமா?

image

தூத்துக்குடி மக்களே, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெண்கள், மாற்றுத்திறனாளிகள் சுயசார்புடன் வாழ சத்யவாணி முத்து அம்மையார் நினைவாக தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கபடுகின்றன. ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கும் குறைவாக உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் அல்லது தூத்துக்குடி மாவட்ட சமூக நல அலுவலரை அனுகலாம். SHARE பண்ணுங்க

News February 10, 2026

தூத்துக்குடி: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3000

image

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்குள் உள்ள, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் பெறலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். PM-SYM மூலம் 60 வயதுக்கு பின் ரூ.3,000 மாத பென்ஷன் பெறலாம். ஆதார், மொபைல் எண் வங்கி விவரங்களுடன் <>இங்கே கிளிக்<<>> செய்து இலவசமாக பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!