News March 3, 2025
தூத்துக்குடி இளைஞர்களுக்கு வாய்ப்பு

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் முன்னணி நிறுவனங்களில் ஊக்கத் தொகையுடன் பாரத பிரதமரின் இன்டர்ன்ஷீப் தொழில் பயிற்சி பெறுவதற்கான வேலை வாய்ப்பு பதிவு செய்யும் முகாம் இம்மாதம் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. கோரம்பள்ளத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறும் இந்த முகாமை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தூத்துக்குடிஆட்சியர் இளம்பகவத் கேட்டுக் கொண்டுள்ளார்.*நண்பர்களுக்கு பகிரவும்*
Similar News
News April 21, 2025
சீருடை பணியாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் 1299 சார்பு ஆய்வாளர்கள் (tnusrb_si )போட்டி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இந்த தேர்வில் கலந்துகொள்ள உள்ள தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொழில்நெறி வழிகாட்டுதல் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் வரும் 23ஆம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
News April 21, 2025
தூத்துக்குடியில் ரூ.25,000 ஊதியத்தில் வேலை

தூத்துக்குடியில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதி பிரிவில் 10 காலி பணியிடங்கள் உள்ளன. இதற்கு டிப்ளமோ படித்த ஆண்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ஊதியமாக ரூ.25,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <
News April 21, 2025
பூட்டை உடைத்து 14 பவுன் நகை திருட்டு

தூத்துக்குடி வி. இ ரோட்டை சேர்ந்தவர் ஜாக்சன் (61). நேற்று முன்தினம் இவர் ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி தேவாலயம் சென்று விட்டு நள்ளிரவில் வீடு திரும்பியுள்ளார். அப்போது இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த 14 பவுன் நகை திருடப்பட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.