News November 7, 2025
தூத்துக்குடி இரவு ஹலோ போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News November 6, 2025
தூத்துக்குடி மாவட்டத்தில் பிடிஓ-க்கள் பணியிட மாற்றம்

தூத்துக்குடி மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 3 பேரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவிட்டுள்ளார். அதன்படி திருச்செந்தூர் பிடிஓ, உடன்குடி அலுவலகத்திற்கும், உடன்குடி பிடிஓ இப்ராஹிம் சுல்தான், கயத்தார் அலுவலகத்திற்கும், கயத்தார் பிடிஓ வெங்கட்ராமன், தூத்துக்குடி உதவி இயக்குனர் அலுவலக ஊராட்சி அலுவலகத்திற்கும் பணியிட இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
News November 6, 2025
தூத்துக்குடி: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

தூத்துக்குடி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <
News November 6, 2025
தூத்துக்குடி: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் – புன்செய், கிராம நத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர், ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவசமாக அந்த இடத்திற்கு பட்டா பெறலாம். மேற்கண்ட தகுதிகள் இருந்தால் VAO-விடம் இதற்கான விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்புத் திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். எனவே இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!


