News September 6, 2025
தூத்துக்குடி: இரவு ரோந்து காவல் அதிகாரி விபரம்

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட போலீசாரின் விவரத்தை வெளியிட்டுள்ளது. சாத்தான்குளம் டிஎஸ்பி ஆவுடையப்பன் தூத்துக்குடி மாவட்ட இரவு ரோந்து அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் போலீசாரின் பெயர்கள், பொறுப்புகள் மற்றும் தொடர்பு எண்கள் பட்டியலில் உள்ளன. மேலே உள்ள படத்தில் அந்த விவரங்கள் காணலாம்.
Similar News
News September 6, 2025
கோவில்பட்டி கொலையில் இரு சிறார்கள் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சண்முகா நகர் மயானம் பகுதியில் ஆட்டோ ஓட்டுனரான மாரிச்செல்வம் (31) என்பவர் நேற்று கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக அதே பகுதியில் சேர்ந்த 17 வயதுடைய 2 சிறுவர்கள் மாரிசெல்வத்தை கொலை செய்ததாக போலீசார் கைது செய்தனர். மேலும் முருகன் (51) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 6, 2025
தூத்துக்குடி: நாளை நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பல இடங்களில் நடைபெறும் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களில் ஓட்டப்பிடாரம் மற்றும் தளவாய்புரம் பகுதிகளில் நிகழ்வுகள் நடைபெற உள்ளன. (செப்டம்பர் 6) சனிக்கிழமை அன்று ஓட்டப்பிடாரம் பகுதியில் கச்சேரி மற்றும் தளவாய்புரம் அரசு மேல்நிலைப்பள்ளி குறுக்கு சாலையில் முகாம் நடத்தப்பட உள்ளது. ஓட்டப்பிடாரம் பகுதி மக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு நலன் பெறுமாறு அழைக்கப்படுகின்றனர்.
News September 5, 2025
தூத்துக்குடி: ரூ.1 லட்சம் ஊதியத்தில் விமான நிலைய வேலை.!

இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள ஜூனியர் நிர்வாகி பணியிடங்களுக்கு 976 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இளநிலை பொறியியல் பட்டப்படிப்பை முடிந்தவர்கள் செப்.27 க்குள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள்<