News December 27, 2025
தூத்துக்குடி: இன்றைய இரவு ஹலோ போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News January 1, 2026
தூத்துக்குடியில் நூதன மோசடி! கம்மி விலையில் பொருட்கள்?

தூத்துக்குடியில் சவுண்ட் சா்வீஸ் தொழில் செய்துவரும் நபருக்கு முகநூல் மூலம் அறிமுகமாகிய நபா்தன்னிடம் குறைந்த விலையில் மின்னணு பொருள்கள் விற்பனைக்கு இருப்பதாக கூறியுள்ளாா். இதனால், அவா் கேட்ட ரூ.1.42 லட்சம் பணத்தை ஆன்லைனில் அனுப்பியுள்ளார். ஆனால் பொருட்கள் வந்து சேரவில்லை. இந்த மோசடி புகாரை அடுத்து தூத்துக்குடி சைபர் கிரைம் போலீசார் திருப்பூரை சேர்ந்த சதீஷ்குமாரை (35) கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News January 1, 2026
தூத்துக்குடி: Driving Licence-க்கு முக்கிய Update!

தூத்துக்குடி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <
News January 1, 2026
தூத்துக்குடி: கார் மோதி பரிதாப பலி!

கயத்தாறு அருகே அரசன் குளம் கிராமத்தில் நான்கு வழிச்சாலையில் டூவீலர் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் டூவீலரை ஓட்டிச் சென்ற இராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அசோக் (50) என்பவர் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு விசாரனை நடத்தி வருகின்றனர்.


