News February 20, 2026
தூத்துக்குடி இன்று இரவு ஹலோ போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News February 20, 2026
தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது

தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் குலசேகரன்பட்டினம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட முருகேசன் (59), இசக்கி ராஜா (22) மற்றும் கோபால்சாமி (47) ஆகியோர் இன்று தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இதற்கான உத்தரவை மாவட்ட எஸ்.பி மதன் வெளியிட்டுள்ளார்.
News February 20, 2026
தூத்துக்குடி: வாக்காளர்கள் கவனத்திற்கு…

தூத்துக்குடி மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!
News February 20, 2026
தூத்துக்குடி: HI சொன்னா போதும்., வங்கி விபரங்கள் Whatsapp-ல்

தூத்துக்குடி மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…


