News February 16, 2026

தூத்துக்குடி இன்று இரவு ஹலோ போலீஸ் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News February 16, 2026

தூத்துக்குடி: வாடகை வீட்டில் இருக்கீங்களா?

image

தூத்துக்குடி மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா? சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
1.அட்வான்ஸ் தொகையாக 2 மாத வாடகையை மட்டுமே கொடுக்க வேண்டும்.
2.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.
3.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.
4.மீறினால் அதிகாரிகளிடம் (1800 5990 1234) என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம். (SHARE)

News February 16, 2026

தூத்துக்குடி: டூவீலர் மோதல்; தூக்கி வீசப்பட்டு ஒருவர் பரிதாப பலி

image

திருச்செந்தூர் அருகே உள்ள மெஞ்ஞானபுரம் இலங்கநாதபுரம் பகுதியை சேர்ந்த பெலிக்ஸ்ராஜ் (79) என்பவர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் கிளை செயலாளராக உள்ளார். இந்த நிலையில் இவர் அப்பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த மற்றொரு பைக் அவரது பைக் மீது மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 16, 2026

தூத்துக்குடியில் இளைஞர் தற்கொலை செய்த சோகம்.!

image

தூத்துக்குடி பிரையண்ட் நகரைச் சேர்ந்த புஷ்பராஜ், இவர் துறைமுகத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு நந்தினி என்ற மனைவி உள்ளார். புஷ்பராஜிற்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் விவாகரத்து பெற்றனர். மனைவியை பிரிந்து தனிமையில் வாழ்ந்து வநத புஷ்பராஜ் நேற்று வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தென்பாகம் போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!