News August 14, 2025

தூத்துக்குடி இன்று இரவு ரோந்து போலீஸ் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News August 14, 2025

தூத்துக்குடியில் புகைப்படப் போட்டி அறிவிப்பு

image

தூத்துக்குடி 6வது புத்தகத் திருவிழா ஆக.22 முதல் 31 வரை நடைபெறுகிறது. இதையொட்டி, புகைப்படப் போட்டி ஆக. 14 – 21 வரை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்ட கலாச்சாரம், பாரம்பரியம், இயற்கை, தொழிலாளர் வாழ்க்கை போன்ற தலைப்புகளில் அதிகபட்சம் 5 சொந்தப் படங்களை, AI/கிராபிக்ஸ் இல்லாமல், 5 MBக்கு குறைவாக, thoothukudi.nic.in மூலம் பதிவேற்றலாம்.

News August 14, 2025

வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஆட்சியர் அலுவலகம்

image

நாட்டின் 79வது சுதந்திர தின விழா நாளை மறுநாள் (ஆக. 15) கொண்டாடப்பட உள்ளது. இதனை ஒட்டி தேசமே விழாக்கோலம் பூண்டு வருகிறது. அந்த வகையில் கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தேசிய ஒருமைப்பாட்டை விளக்கும் வகையில் சிகப்பு வெள்ளை பச்சை நிறத்தில் வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் வகையில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

News August 13, 2025

தூத்துக்குடி: இ.ஸ்கூட்டருக்கு ரூ.20,000 மானியம்.. APPLY!

image

தூத்துக்குடி மக்களே தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியம் சார்பாக தற்காலிக பணியாளர்களுக்கு பொருளாதார மேம்படுத்தும் நோக்கத்தோடு புதிதாக இ.ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம் வழங்குகிறது. <>இந்த இணையதளத்தில்<<>> Subsidy for eScooter என்ற ஆப்ஷனை கிளிக் செய்து நீங்கள் உறுப்பினராக பதிவு செய்த பின்னர் அதில் கேட்கப்படும் ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!