News December 28, 2025

தூத்துக்குடி: இனி Whatsapp மூலம் தீர்வு!..

image

தூத்துக்குடி மாவட்டத்தில் உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து இனி மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக எளிதில் புகார் அளிக்கலாம். அதன்படி 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இத்தகவலை மறக்காமல் SHARE பண்ணுங்க!

Similar News

News January 2, 2026

தூத்துக்குடி: 12th தகுதி.. ரூ.35,400 சம்பளத்தில் ரயில்வே வேலை

image

தூத்துக்குடி மக்களே, இந்தியன் ரயில்வேயில் பல்வேறு பணிகளுக்கு 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 18 வயது நிரம்பிய 12வது படித்தவர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து ஜன.29க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,400 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு மூலம் ஆட்கள் பணியமர்த்தப்படுவர். இந்த நல்ல தகவலை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News January 2, 2026

தூத்துக்குடி: சிறுமிக்கு தொடர் பாலியல் தொல்லை

image

விளாத்திகுளத்தில் க.சென்றாயபுரம் கிராமத்தை சேர்ந்த சுப்பையா என்பவரின் மகன் அப்பனசாமி (37) சிலம்பம் கற்றுக் கொடுத்து வந்துள்ளார். அங்கு, 15 வயது சிறுமிக்கு இவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பெயரில் அப்பனசாமியை (37) விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News January 2, 2026

தூத்துக்குடி: பெற்றோர் திட்டியதால் தூக்கிட்டு தற்கொலை

image

உடன்குடி பகுதியை சேர்ந்தவர் இசக்கிமுத்து (57). இவரது கடைசி மகன் சுந்தர் (25). கட்டிடத்தொழிலாளியான சுந்தருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவில் சுந்தர் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தபோது அவரை தாய் சாவித்திரி கண்டித்துள்ளார். இதனால் மனவேதனையில் சுந்தர் தனது அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குலசை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!