News August 17, 2025
தூத்துக்குடி: இக்கட்டான சூழலில் இங்கு தங்கலாம்

இக்கட்டான சூழ்நிலையில் உள்ள பெண்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் நோக்கத்தோடு தங்குமிடம், உணவு, உடை, ஆலோசனை, பயற்சி, மருத்துவம் மற்றும் சட்ட உதவி போன்றவை தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படுகிறது. இந்த இல்லத்தில் 30 பெண்கள் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரையிலும் தங்கலாம். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இல்லத்தில் தங்க லலிதாம்பிகை என்பவருக்கு 9443148599 , 9487802990 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News August 17, 2025
தூத்துக்குடியில் நாளையுடன் கடைசி! உடனே APPLY

தூத்துக்குடி மாவட்ட மக்கள் நல்வாழ்வு மையத்தில் சுகாதார பணியாளர் (MLHP) வேலைக்கு ஒப்பந்த அடிப்படையில் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மருத்துவம் சார்ந்த பாடப்படிப்பு படித்து இருக்க வேண்டும். சம்பளம் – ரூ.18,000. <
News August 17, 2025
தூத்துக்குடியில் டீ, காபி விலை திடீர் உயர்வு

தூத்துக்குடியில் சாலை ஓரங்களில் உள்ள டீக்கடைகளில் பெரும்பாலாக டீ, காபி மட்டும் விற்பனை செய்யப்படும் கடைகளில் கடந்த சில மாதங்களாக டீ, காபி களின் விலை 12 ரூபாய் இருந்து வந்தது. இந்நிலையில், தற்போது டீ, காபிகளின் விலை ரூபாய் 3 அதிகரித்து குறைந்தபட்ச 15 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. பால் மற்றும் டீ தூள்களின் விலை ஏற்றம் இந்த விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
News August 17, 2025
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைமுகம் சாதனை

தூத்துக்குடி வஉசி துறைமுகம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி காற்றாலை சூரிய ஒளி மின்சாரத்தில் இந்த ஆண்டு ஜூலை மாதம் 16,23,461 யூனிட்டுகள் மின்சாரம் உற்பத்தி செய்து புதிய மைல்களை எட்டி சாதனை படைத்துள்ளது. கடந்த ஜூன் மாதம் 15,30,614 யூனிட் மின்சாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.