News April 6, 2025
தூத்துக்குடி ஆட்சியர் ஹெல்த் வாக்

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட தெற்கு கடற்கரை சாலை பகுதியில் இன்று பொதுமக்கள் ஆரோக்கியத்தை பேணுதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 8 கிலோ மீட்டர் தூரம் ஹெல்த் வாக் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன் மற்றும் சுகாதார பிரிவைச் சேர்ந்த அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News April 8, 2025
இன்ஸ்டா மூலம் பெண்ணிடம் ரூ.3 லட்சம் மோசடி

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் வந்த மருத்துவ உபகரணங்கள் பற்றிய தகவலை அடுத்து, அந்த நிறுவனத்தில் மருத்துவ உபகரணம் வாங்க ரூ.3 லட்சம் கட்டியுள்ளார். பின்னர் அது மோசடி என தெரிந்ததும் தூத்துக்குடி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் புலனாய்வு செய்து அந்த நிறுவனத்தின் வங்கி கணக்கை முடக்கி பெண்ணிடம் ஏமாற்றப்பட்ட ரூ.3 லட்சத்தை மீட்டு இன்று ஒப்படைத்தனர்.
News April 8, 2025
நாளை காவல்துறை குறை தீர்ப்பு நாள் கூட்டம்

கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாரம் தோறும் புதன்கிழமை பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடைபெறுகிறது, அந்த வகையில் நாளை (ஏப்ரல் 9) நடைபெறும் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில், பொதுமக்கள், காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள புகார் தொடர்பாக மனுக்கள் அளிக்கலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.
News April 8, 2025
தூத்துக்குடியில் மனதை மயக்கும் மயில் தோட்டம் தெரியுமா?

ஓட்டப்பிடாரம் அருகே கேரளாவைச் சேர்ந்தவர் 1980 ஆண்டு, 58 ஏக்கரில் தோட்டம் ஒன்றை அமைத்து, மா, தென்னை, கொய்யா என பல மரங்களை நட்டார். சில ஆண்டுகளில் இந்த தோட்டத்திற்கு ஒரு சில மைல்கள் வர ஆரம்பித்தன. இப்போது இத்தோட்டத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட மையில்கள் உள்ளன. பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படும் இந்த தோட்டம், மயில்களுக்கான தோட்டம் என்று அழைக்கப்படுகிறது. இதை அனைவரும் கண்டு மகிழ SHARE பண்ணுங்க