News December 21, 2024
தூத்துக்குடி ஆட்சியரகத்தில் உயர்மட்ட குழு கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று(டிச.20) மாவட்ட ஆட்சியர் தலைமையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நிலுவை பத்திகளை நீக்கம் செய்வது தொடர்பான 43வது உயர் மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உதவி இயக்குனர் மற்றும் உதவி திட்ட அலுவலர் மற்றும் மாவட்ட அலுவலர் மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Similar News
News August 30, 2025
NOTE: தூத்துக்குடியில் இன்று எங்கெல்லாம் பவர் கட்?

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (ஆக. 30) பல்வேறு இடங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி, ஸ்ரீவை., சாத்தான்குளம், உடன்குடி, நாசரேத், மஞ்சள்நீர்காயல், நாகலாபுரம், பழனியப்பபுரம் உள்ளிட்ட மின் சரக பகுதிகளில் காலை 9 முதல் மாலை 4 வரை மின் விநியோகம் இருக்காது. எங்கெல்லாம் மின்தடை என விரிவாக தெரிந்துகொள்ள<
News August 30, 2025
தசரா திருவிழா; சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா, திருச்செந்தூர் முருகன் கோவில் கந்த சஷ்டி மற்றும் தீபாவளி பண்டிகைகள் நெருங்குவதால், தூத்துக்குடி-திருச்செந்தூர் இடையே கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன், மத்திய அமைச்சர் எல். முருகனிடம் மனு அளித்தார்.
News August 30, 2025
தூத்துக்குடி: இரவு ரோந்து காவலர் எண் வெளியீடு

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று இரவு ரோந்து காவல்துறை போலீசாரின் விவரம் மாவட்ட காவல்துறையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தூத்துக்குடி மாவட்ட இரவு ரோந்து அதிகாரியாக தூத்துக்குடி டிஎஸ்பி மதன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள போலீசார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அவர்களின் தொடர்பு எண் மேலே உள்ள படத்தில் உள்ளது.