News April 29, 2024
தூத்துக்குடி அருகே கஞ்சா விற்றவர் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கஞ்சா விற்பனையை தடுப்பதற்கு காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தாளமுத்து நகர் போலீசார் நேற்று மாதா நகர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த வினோத் என்பவரை கைது செய்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Similar News
News January 7, 2026
தூத்துக்குடிக்கு பொங்கல் பரிசாக ரூ.162 கோடி!

தமிழ்நாடு அரசு இந்த வருட பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3000 மற்றும் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்டவை வழங்கவுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 5,41,007 ரேஷன் அட்டை தாரர்கள் இதன் மூலம் பயன்பெறுகின்றனர். இதன்படி, தூத்துக்குடி மாவட்டத்திற்கு மட்டும் ரூ.3,000 பொங்கல் பரிசு தொகைக்காக 162 கோடியே 30 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. SHARE
News January 6, 2026
தூத்துக்குடி: இனி வரி செலுத்துவது ரொம்ப ஈஸி

தூத்துக்குடி மக்களே.. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம்.<
News January 6, 2026
தூத்துக்குடியில் வேலைவாய்ப்பு முகாம் – ஆட்சியர் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் இணைந்து தூத்துக்குடியில் ஜன.9 அன்று சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. கோரம்பள்ளம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நடைபெறும் இந்த வேலை வாய்ப்பு முகாமினை படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.


