News May 12, 2024
தூத்துக்குடி அருகே ஒருவர் பலி

ஓட்டப்பிடாரத்தை சேர்ந்தவர் முத்துகுமார் (41). இவர் அரசு கேபிள் டிவி ஒப்பந்த பணியாளராக வேலை செய்து வந்தார். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் இன்று காலை முத்துகுமார் தோட்டப் பணிகளை மேற்கொண்டு வந்தார். அப்போது தோட்டத்தில் அறுந்து கிடந்த உயரழுத்த மின்கம்பியை எதிர்பாராதவிதமாக முத்துகுமாா் மிதித்துள்ளார். இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
Similar News
News December 28, 2025
தூத்துக்குடி: லாரி மோதி சம்பவ இடத்தில் பலி!

பசுவந்தனை, கன்னகட்டையைச் சோ்ந்த பொம்மு ராஜா (35). இவா் தூத்துக்குடியில் உள்ள தனியாா் ஆலையில் காவலாளியாக பணிபுரிந்து வந்தாா். நேற்று இரவு வேலைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாராம். தூத்துக்குடி புறவழிச் சாலை மடத்தூா் சந்திப்பு சென்றபோது, துறைமுகம் நோக்கிச் சென்ற டிப்பா் லாரி அவரது பைக் மீது மோதியது. விபத்தில் பொம்மு ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். சிப்காட் காவல் நிலைய போலீசார் விசாரணை.
News December 28, 2025
தூத்துக்குடி: SBI வங்கியில் தேர்வு இல்லாமல் வேலை!

தூத்துக்குடி மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. கடைசி தேதி டிச.23 முடிவடைய இருந்த நிலையில் விண்ணப்ப தேதி ஜன 5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது., 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <
News December 28, 2025
தூத்துக்குடி: பங்குச் சந்தையால் பறிபோன இளைஞர் உயிர்!

வல்லநாடு அருகே வடக்கு காரசேரி பகுதியை சேர்ந்த மணிகண்டன் (35) என்பவர் டீக்கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் அவர் பங்குச்சந்தை வர்த்தகத்தில் 15 லட்சம் ரூபாய் முதலீடு செய்து அதில் நஷ்டம் ஏற்பட்டு மன வருத்தத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் அப்பகுதியில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்தார். தொடர்ந்து போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


