News January 14, 2026

தூத்துக்குடி: அரிவாளுடன் சிக்கிய 3 சிறுவர்கள்

image

தூத்துக்குடி தென்பாகம் போலீசார் டைட்டில் பார்க் அருகே உப்பளத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த சிவகுமார் மற்றும் 3 இளம் சிறார்களை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர்களிடம் பெரிய அரிவாள் இருப்பது கண்ட போலீசார் அதை பறிமுதல் செய்து 3 சிறார்களையும் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சிவகுமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News January 28, 2026

தூத்துக்குடி: ரூ.1000 வரலையா? இங்க COMPLAINT பண்ணுங்க!

image

தூத்துக்குடி மக்களே, ரூ.1000 வரலையா? மேல்முறையீடு செய்தும் பலன் இல்லையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. <>இங்கு க்ளிக்<<>> செய்து உங்க பெயர், ரேஷன் எண், குடும்ப தலைவர் பெயர் பதிவிட்டு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆவணங்களை பதிவேற்றம் செய்து பதிவு பண்ணுங்க. 30 நாளில் தீர்வு கிடைக்கும். SHARE பண்ணுங்க.

News January 28, 2026

தூத்துக்குடி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

தூத்துக்குடி மக்களே கோடைகாலம் வெகு விரைவில் தொடங்க உள்ளது. திடீரென மின் விநியோகம் துண்டிக்கப்பட்டால், வெக்கையில் வாடுவதை தவிர்க்க அப்போது லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனி நீங்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், சில நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 28, 2026

கோவில்பட்டி கடலை மிட்டாய் விலை உயர்வு!

image

நிலக்கடலை விலை உயர்வைத் தொடர்ந்து கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் நல சங்கம் மிட்டாய் விலையை 40 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதுவரை கிலோ ரூ.200 முதல் ரூ.260 வரை விற்பனையான நிலையில், இப்போது ரூ.260-க்கு விற்கப்படுகிறது. இன்று முதல் புதிய விலை அமலுக்கு வந்தது. விலை உயர்வால் பலருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த செய்தியை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யுங்க

error: Content is protected !!